இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு.!இந்திய தபால் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

இந்திய தபால் துறையில் ஓட்டுநர் பதவிக்கு 5 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஒளி மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான சரியான ஓட்டுநர் உரிமம் வைத்திருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

ஓட்டுநர் – ரூ.19,900/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments