அம்மாபட்டினம் ஊராட்சியின் முக்கிய அறிவிப்பு




கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள்
       ஊராட்சி மன்றம் சாா்பாக இன்று (29/07/2020) புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கொரோனா நோய்த்தொற்று பரவலை  தடுக்கும் விதமாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மாபட்டினம் ஊராட்சியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வெளியூர் வாசிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். 
 அம்மாபட்டினத்தில் உள்ள கடைகளில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அதே போல கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முதல் முறையாக ஊராட்சி மன்றம் சார்பாக இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும். இரண்டாவது முறையாக வழங்கப்படும் முகக்கவசத்திற்கு அவர்களிடமிருந்து உரிய தொகை வசூல் செய்யப்படும்.

 பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரும் நபர்கள்  கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது  முகக்கவசம் அணிந்து வராதவர்கள் பள்ளிவாசல் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை நாளை 30/07/2020 முதல் 10/08/2020ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பிறகு தேவை பட்டால் நடைமுறையில் மாற்றம் செய்யப்படும்.

வரும் ஹஜ் பெருநாளை கருத்தில் கொண்டு கறி கடைகளுக்கு மட்டும் வரும் வெள்ளி, சனி ,ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசு உத்தரவின்படி 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் திருமணத்திற்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

திருமணத்தில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்களுக்கு கை கழுவுவதற்கு வசதியாக சானிடைசர்  ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு வரும் நபர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பாக Temperature பார்க்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் பரிசோதனை செய்வதற்கு ஊராட்சி மன்றத்தில் முன்கூட்டியே  தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மருந்துகள் இலவசமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்படும்.
தேவைப்படுபவர்கள் ஊராட்சி மன்றத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளலாம்.

வண்டிகளில் ஊருக்குள் வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகள் ஊராட்சி மன்றத்தின் அனுமதி பெற்றே வியாபாரம் செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வியாபாரம் செய்யும் வண்டி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வண்டி வியாபாரிகள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும்.

  கட்டிடத்தொழிலாளர்கள்   முகக்கவசம் அணிந்து பணி செய்யவேண்டும். தொழிலாளர்கள் நேராக வேலை செய்யுமிடத்திற்கு சென்றுவிடவேண்டும். சாலைகளில் கூட்டமாக நிற்கக்கூடாது.
அம்மாபட்டினத்தில்  இயங்கிவரும் மீன் கடைகளுக்கு மாற்று இடமாக  விச்சூர் ரோடு எதிர்புறம் தெற்கு ஜமாஅத் அமைத்து கொடுக்கும் கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். வேறு இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது.
நமது அம்மாபட்டிணம் ஊராட்சியை கொரோனா இல்லாத ஊராட்சியாக மாற்ற மேற்கூறப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் சாா்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments