கோழிக்கோட்டில் கோர விபத்து.. ரன்வேயில் வழுக்கி இரண்டாக பிளந்த விமானம்.! (படங்கள்&வீடியோ)வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து 180 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று இரவு 7.40 மணியளவில் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது.

கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி ஏர் இந்தியா விமானம் விபத்துகுள்ளாகியது. விமானம் இரண்டு துண்டுகளான உடைந்து நொறுங்கியது. கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் விமானிகள், விமான பணியாளர்கள் என மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் விமானிகள் இருவர் உள்ளிட்ட 15 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தேசிய மீட்பு படை தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாது மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

விபத்து நடைபெற்ற கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் மலை மீது அமைந்திருப்பதால் இது டேபிள் டாப் ரன்வேயை கொண்டதாகும். கேரளாவில் இருக்கும் ஒரே Tabletop runway கொண்ட விமானம் நிலையம் இது ஆகும். டேபிள் டாப் ரன்வே என்பது மலை மீது அமைக்கப்பட்டு இருக்கும், அல்லது உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓடுபாதை கொண்ட விமான நிலையம் ஆகும். இங்கு பெரிய விமானங்களை தரையிரக்குவது மிகவும் கடினமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

மேலே சென்று கீழே வந்தது இதனால் அந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் மேலே சென்றுவிட்டு, யு டர்ன் அடித்துள்ளது . இது அப்படியே இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. விமானம் முதலில் கீழே இறங்க வந்துவிட்டு, பின் முடியாமல் மேலே சென்றுள்ளது. அப்படியே சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வரும்போது வழுக்கி உள்ளது. இந்த வீடியோ மூலம் என்ன நடந்தது என்று தெளிவாக தெரிகிறது. இரண்டாவது முறை வரும் போது விபத்து நேரிட்டுள்ளது. இந்த விமான ஓடுபாதை மிகவும் சிறியது என்பதும் இந்த விபத்துக்கு காரணம் ஆகவும்.

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 056 546 3903, 05430 90572, 0543090575 மற்றும் 0543090572 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments