புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கணக்கன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 14½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து குமரேசனின் மனைவி கார்த்திகா, ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments