புதுக்கோட்டை கொரோனா அரசு சித்த மருத்துவ மையத்தில் ஒரே நாளில் 54 பேர் அனுமதி.!



கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நோய்க் கிருமியைத் தடுக்க கபசுரக்குடிநீர் போன்ற சித்தமருத்துவத்தில் உள்ள மூலிகை கசாயம்

குடித்தால் தற்காத்துக் கொள்ளமுடியும் என்றும் மேலும் பாரம்பரிய உணவுகள், சிறுதானியங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும் சித்தமருத்துவர்கள் தொடக்கத்திலிருந்து கூறிவருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னை, கோவை போன்ற பல இடங்களில் சித்தமருத்துப் பிரிவு சிறப்பாகச் செயல்படுவதால் உயிரிழப்புகள் குறைந்து சிகிச்சை முடிந்து குணமடைந்து உற்சாகமாக வீட்டிற்குச் செல்வதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் மாவட்டம் தோறும் சித்தமருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களைத் திறக்கக் கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவத் துறையின் கீழ் 100 படுக்கைகளுடன் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவிட் 19 சித்த மருத்துவ மையத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments