அறந்தாங்கி புதிய டிஎஸ்பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மஜக நிர்வாகிகள்.!தமிழக அரசு காவல்துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின்படி  புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இதில் புதுக்கோட்டை, பொன்னமராவதி, அறந்தாங்கி ஆகிய டிஎஸ்பிக்கள் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு பாலமுருகன் அவர்கள் தன்னுடை பொறுப்பை புதிய DSP ஜெ.ஜெயசீலன் அவர்களிடம் ஒப்படைத்து விடைபெற்றுக்கொண்டார்.

எனவே இன்று அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட உயர்திரு ஜெ.ஜெயசீலன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி, கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது ஆகியோர் சந்தித்து வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

Post a comment

0 Comments