கோபாலப்பட்டிணத்தில் தமுமுக கிளை சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம்.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளையின் சார்பாக  இன்று  (10.08.2020) சுற்றுவட்டாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக பரவிவருவதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரக் குடிநீர்  கோபாலப்பட்டிணம் ஊர்முழுவதும்  வீடுவீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

இதனை தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் கோட்டை MSK சாலிகு, மாவட்ட  பொருளாளர் அஜ்மல்கான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றிய செயாலாளர் அப்துல் சுக்கூர், கோபாலப்பட்டிணம் கிளைத்தலைவர் முஹம்மது மசூது, ஆவுடையார்கோவில்  ஒன்றிய துணை செயலாளர் அசாருதீன், SMI மாவட்ட பொருளார் முபாரக் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தகவல்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
கோபாலபட்டிணம் கிளை
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

Post a comment

0 Comments