ஏம்பக்கோட்டையில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வாலிபரின் இருசக்கர வாகனம் திருட்டு.!கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 1-வது வீதியை சேர்ந்தவர் அப்துல்லா S/o அஹ்மது இபுறாஹீம்.

இவர் நேற்று 10.08.2020 காலை 7.00 மணியளவில் ஏம்பக்கோட்டை MS டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பிறகு மதியம் 2.30 மணியளவில் வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

அப்துல்லா புகாரின் பேரில், மீமிசல் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

வண்டி எண்:- TN 55 AT 4875
வண்டி :- Bajaj Pulsar 180

தகவல்: அஜ்மீர் கான் (7395869665), கோபாலப்பட்டிணம்.
Post a comment

0 Comments