கொரோனா பேரிடர்கால சேவையை பாராட்டி மஜக-வுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கம் விருது.!அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் 83-வது ஆண்டு துவக்கவிழா, 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழா, கொரோனா பேரிடர்கால பணி செயதவர்களுக்கு விருது வழங்கும் விழா எனும் முப்பெரும் விழா கபசுர குடிநீர் குடித்து துவங்கி சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

கோரோனா பேரிடர் காலத்தில்  பலகட்டங்களாக கபசுர குடிநீர் வழங்கியது, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட  உழைப்பாளர்களுக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் நிவாரண பொருட்கள் வழங்கியது, நியாயவிலை கடைகளில் மக்களுக்கு சமூக இடைவெளி பணி செய்தது. நகராட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து கொரோனா அறிகுறி கணக்கெடுப்பு செய்தது. 10 சுமைதூக்கி இயந்திரங்கள் மூலம் நகர் பகுதியில் கிரிமி நாசினி மருந்து தெளித்தது. கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கியது, ஆயிரக்கணக்கான முககவசங்கள் வழங்கியது. 

அறந்தாங்கி வர்த்தக சங்க சேவைகளில் பங்குகொண்டு ஒத்துழைப்பு தந்தது என்பன போன்ற சேவைகளை செய்த மனிதநேய ஜனநாயக கட்சியை பாராட்டி அதன் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அவர்களுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் பா.வரதராஜன் செயலாளர் வி.ஜி.செந்தில்குமார், பொருளாளர்  ச.சலிம் ஆகியோர் சால்வை அணிவித்து சான்றிதழோடு கேடையமும் வழங்கினார்கள்.


Post a comment

0 Comments