கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு.!கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக நடைபெறும், சுதந்திர தின கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்டு 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் 74-வது  சுதந்திர தின விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக,  யாரும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உள் மாவட்டங்களில் அதிகம் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a comment

0 Comments