புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 114 மாடுகள் பிடிபட்டன: மாடுகளை திரும்பப் பெற ரூ.5 ஆயிரம் அபராதம்.!



புதுக்கோட்டை நகரில் நேற்று முன் தினம் சாலைகளில் சுற்றிதிரிந்த  மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து புதுக்கோட்டை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்க மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நகராட்சி நிர்வாகதிற்கு உத்தரவிட்டார்.


புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட 42 வார்டுகள் உள்ளது  இந்த பகுதிகளில் நாய்களும் மாடுகளும் அதிக அளவில் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் வெறிபிடித்த நாய் சாலையில் திரிந்த மாட்டை கடித்தில் மாட்டிற்கு வெறிபிடித்து சாலையில் சென்றவர்களை முட்டியதில் வடக்கு நான்காம் வீதியைச் சேர்ந்த சேகர் என்பவர் உயிரிழந்தார்,

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார் அவர் உத்தரவின் படி இன்று புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில்  பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 114 மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்கப்பட்டது.  மாடுகளை வளர்ப்பவகள் மாடுகளை வீட்டில் கட்டி போடாமல் சாலைகளில் சுதந்திரமாக சுற்றிதிரியவிட்ட  மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து  ஒரு பெரிய மாட்டிற்கு தலா ரூ 5 ஆயிரமும் வீதமும்  ஒரு கன்றுகுட்டிக் தலா ரூ 3 ஆயிரமும் அபராதமாக வசூல் செய்யப்படும் என்று  நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இனி மேல் நகர் பகுதிகளில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களுடைய மாடுகளை வீட்டில் கட்டி போடாமல் சாலைகளில் சுற்றிதிரிய விட்டால்  நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என எச்சரித்துள்ளார்.


Post a Comment

0 Comments