திருமயம் அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை - பையில் வைத்து மரத்தில் தொங்கவிடப்பட்ட கொடூரம்.!நமணசமுத்திரம் அருகே கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், இளங்குடிப்பட்டி அய்யனார் கோவில் அருகே உள்ள மரத்தடியில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கட்டைப்பையில் வைக்கப்பட்டு வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், நமணசமுத்திரம் போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த குழந்தையின் தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியதில், உள்ளூர் பகுதியில் தற்போது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதும், வெளியூரில் பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று தெரிய வந்தது.

அந்த குழந்தையின் தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Post a Comment

0 Comments