விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு கலை, சமூகப் பணி, பொதுசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடைவர் ஆவர். பத்ம விருதுகளான, பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை 2.9.2020 க்குள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 Comments