இரண்டு வயது பெண் குழந்தை டி.வி. விழுந்து உயிரிழப்பு!
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரது 2 வயது குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டு நாற்காலியில் இருந்த பழைய மாடல் டிவி, தரையில் தூங்கி கொண்டிருந்த மகள் நாஷியா பாத்திமா மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது.

உடனடியாக குழந்தையை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை முன்னமே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டி.வி. விழுந்து குழந்தை இறந்த சம்பவம் பெற்றோரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Post a Comment

0 Comments