புதுக்கோட்டையில் உலக இதய நாளையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.!



உலக இருதய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மாமலர் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சங்கத் தலைவர் டாக்டர்  க.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

உலக இருதய தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் “சமுதாயத்திற்காக துடிக்க இதயத்தை பயன்படுத்துங்கள்! அதை உங்களுக்கும் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் அதை பயன்படுத்துங்கள்!!இதுவே இந்த ஆண்டின் இருதய நாளில் நாம் ஏற்கும் உறுதி மொழி!!! என்ற ஸ்லோகத்துடன் சைக்கிள் பேரணி கோர்ட்டு வளாகத்தில் துவங்கி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி,  மேலராஜவீதி, அரசு பொது மருத்துவமனை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது சைக்கிள் பேரணியை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாமலர் மருத்துவமனை நிறுவனரும் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவருமான மருத்துவர் கு.மாரிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில்  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண. மோகன்ராஜ், பட்டய தலைவர் க.நைனாமுகம்மது, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சோ.பார்த்திபன், சைக்கிள் கழக மாவட்ட செயலாளர் அசோகன், சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ப.செல்லத்துரை முன்னிலை வகித்தனர். 

ஏற்பாடுகளை மாமலர் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவர் க.கதிரவன் செய்திருந்தார். மாமன்னர் கல்லூரி சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மாமன்னர் கல்லூரி தரைப்படை மாணவர்களை பாராட்டி சான்றிதழினை வருவாய் கோட்டாட்சியர் வழங்கித் தஉலக இருதய தின விழப்புணர்வு சைக்கிள் பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைப்பெற்றது.ந்தார் நிகழ்ச்சியில் TN55 சைக்கிள் குழுவினர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments