ஆவுடையார்கோவிலில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளை பாதிக்கும் எனவும், அந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திமுக ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார், மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை,திமுக மூத்த முன்னோடி இரா.துரைமாணிக்கம்,ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.பாரதிராஜா ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு தலைவர் கா.உமாதேவி, ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன்,செல்வி முருகானந்தம், அஞ்சலி தேவி கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆ.கலைச்செல்வன்,சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments