கந்தர்வகோட்டை அருகே முந்தி செல்ல முயன்றபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.கந்தர்வகோட்டை அருகே உள்ள நரியன் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஸ்ரீதர்(வயது 20). இவர், நரியன் புதுப்பட்டியில் இருந்து தங்கப்பா உடையாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வீரடிபட்டி முனியன் கோவில் அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற டிராக்டரை முந்திச் செல்ல ஸ்ரீதர் முயன்றார். அப்போது டிராக்டர் டிப்பர் வலதுபக்க சக்கரத்தில் ஸ்ரீதர் நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இறந்த ஸ்ரீதரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

0 Comments