அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை.!அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு முன்பு அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. 

அப்போது அவர்கள், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில், மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments