கந்தர்வகோட்டையில் SDPI கட்சியின் சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.!கந்தர்வகோட்டையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு குற்றவியல் சட்டங்களில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களுக்கு எதிராக ஆகஸ்டு 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பிரசார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் தாஹா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வகோட்டை கிளை தலைவர் ஷேக் முகமது, மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாதன் துரை மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments