அறந்தாங்கி அருகே வயலில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து குடித்த விவசாயி பலி..அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). விவசாயி. இவரது மனைவி மல்லிகா. செல்வராஜ் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்ட வயலுக்கு சென்று உள்ளார்.


அப்போது வயலுக்கு அருகே ஒரு பையில் 2 மதுபாட்டில்கள் கிடந்தது. இதை பார்த்த செல்வராஜ் அதில் இருந்த மதுவை எடுத்து குடித்து உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டிலில் யாரும் விஷம் கலந்து வைத்துள்ளனரா? அல்லது செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

0 Comments