கொரோனா பரவல் எதிரொலி: சர்வதேச விமான போக்குவரத்து தடை 30-ந்தேதி வரை நீட்டிப்பு.!



கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டம் மூலம் கடந்த மே மாதம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.


இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதைப்போல சரக்கு விமான போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அனுமதி பெற்று இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Post a Comment

0 Comments