புதுக்கோட்டையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம்.!கொரோனா தொற்று காலத்தில் ‘நீட்’ தேர்வு அவசியமா? எனவும், அதனை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர். மேலும் டாக்டர் உடை அணிந்தப்படியும், மருத்துவர்கள் போன்று கருவிகளை வைத்தப்படியும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

மேலும் பிரதமருக்கு கோரிக்கை தபால் கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. தற்போது ‘நீட்’ தேர்வு அவசியமா? என்பதை ஆராய்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் எழுதியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் கடிதங்களை தபால் பெட்டியில் போட்டனர்.


Post a Comment

0 Comments