அறந்தாங்கியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு வாகன விபத்து, உடல் நிலையில் பாதிப்பு உள்ளிட்ட எந்த விதமான சிகிச்சை என்றாலும் முதலில் சிகிச்சைக்கு நம்பி வருவது அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மட்டுமே.
இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சி.டி. ஸ்கேன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் பழுது அடைந்து உள்ளது.
அறந்தாங்கி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையின் போது மின்னல் ஏற்பட்டதில் அது பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதனை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments