புதுக்கோட்டையில் செப்.11 முதல் வாரச்சந்தை இயங்கும்.. ஆணையர் அறிவிப்பு.!புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை சந்தைப்பேட்டை பகுதியில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வாரச்சந்தை கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன.

தற்போது வாரச்சந்தை செயல்பட நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வாரச்சந்தை செயல்பட உள்ளது. இதில் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட வீட்டு உபயோகத்திற்கான பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாரச்சந்தை செயல்பட தொடங்கிய நிலையில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை நடைபெறுவது குறித்து நகராட்சி ஆணையர் எந்தவித அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.


Post a Comment

0 Comments