புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!சுகாதாரத்துறையினரால் நேற்று இரவு வெளியிடப்பட்ட பட்டியலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 188 பேர் குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். 

அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 116 ஆக உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments