“சிங்கப்பூரிலிருந்து இந்தியர்கள் வேலையிழப்பு காரணமாக நாடு திரும்புகின்றனர்”- தூதரக அதிகாரி





வேலையிழப்பு காரணமாக அதிக அளவிலான இந்தியர்கள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து நாடு திரும்புகின்றனர் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைத்ததால் அதிகமான இந்திய தொழிலாளர்கள் வீடு திரும்புவதாக இந்திய தூதரக உயர் ஆணையர் பி. குமரன் தெரிவித்துள்ளார். சராசரியாக, சிங்கப்பூரில் இருந்து சுமார் 100 இந்தியர்கள் தினமும் வீடு திரும்ப விமானங்களுக்காக இங்கு உயர் தூதரகத்தில் தொடர்ந்து பதிவு செய்கிறார்கள் என்றும், இதுவரை 11,000 க்கும் மேற்பட்டோர் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடிகள் காரணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் வணிகம் மற்றும் தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வருகிறது. இந்

தியாவில், குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் பணி செய்யும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் வேலையிழப்புகள் அதிகமானால் அது தமிழக பணியாளர்களை பெருமளவு பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.


Post a Comment

0 Comments