அறந்தாங்கி அருகே மேல்மங்கலத்தில் மின்னல் தாக்கி முதியவர் பலி.. 4 பேர் காயம்..அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மேல்மங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 70) என்பவர் கருங்குழிகாட்டு கண்மாயில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதேபோல, அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்த மெய்யழகு மனைவி முத்துலட்சுமி (42) மற்றும் உறவினர்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா(15) ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீடு சேதமடைந்ததுடன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல மாணவநல்லுரை சேர்ந்த திருநாவுக்கரசர்(60) என்பவர் மைவயல் பகுதியில் வயலில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Post a Comment

0 Comments