கோட்டைப்பட்டினத்தில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த விசைப்படகுதாரர்கள் மீது வழக்குப்பதிவு.!
ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஜெகதாப்பட்டினம் பகுதியில் 8 விசைப்படகு தாரர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. அதன் அடிப்படியில் மீன்வளத்துறையினர் அந்த 8 விசைப்படகுதாரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment

0 Comments