புதுக்கோட்டை மாவட்டம், போரம் கிராமத்தில் சத்யா என்ற மாணவி ஏழ்மை நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும், அவருடைய தாயார் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மாணவி சத்யாவிற்கு அரசின் சார்பில் தேவையான இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற உடனடியாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சத்யாவின் தாயாருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவி சத்யாவிற்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணை கடந்த 7-ந் தேதி வழங்கப்பட்டது. அந்த இடத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையும், சத்யாவின் தாயாருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மாணவி தங்கு, தடையின்றி கல்வி கற்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.