புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பயனாளிகள் சிலருக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்டதில், கட்டிடம் கட்டாமலேயே கட்டி முடிக்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் புகார் அளித்தவர்கள் வசிக்கும் பகுதியான ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஆலடிக்காடு பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடி விசராணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.