உக்ரைன் நாட்டின் மருத்துவ கல்லூரியில் பயின்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகமது சித்திவ் மற்றும் தமீம் அன்சார் டாக்டர் பட்டம் பெற்றனர்.!ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் நாட்டின் மருத்துவ கல்லூரியில் பயின்று வந்த கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த டாக்டர்கள் முகமது சித்திவ் மற்றும் தமீம் அன்சார் ஆகியோர் சிறந்த முறையில் பயின்று உக்ரைன் நாட்டின் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெற்றனர்.

முகமது சித்திவ்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் அக்ஸா 3-வது தெரு காரியதரிசி குடும்பத்தைச் சேர்ந்த, ஜனாப் KMM.சேக்தாவுது, மர்ஹூம் KMM. அகமது மைதீன் அவர்களின் பேரனும், ஜனாப் A.ஆனா (எ) அகமது கனி-சித்தி சாரம்மாள் தம்பதியின் மகன் Dr.A.முகமது சித்திவ், உக்ரைனில் உள்ள UZHHOROD NATIONAL UNIVERSITY மருத்துவக் கல்லூரியில் பயின்று MBBS (MD in Ukraine) (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.


தமீம் அன்சார்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் காட்டு குளம் தெரு, தாளனுர் கனி குடும்பத்தை சேர்ந்த ஜனாப் A.அகமது கனி- ரகுமத் கனி தம்பதியின் மகன் Dr. A. தமிம் அன்சார், உக்ரைனில்  UZHHOROD NATIONAL UNIVERSITY மருத்துவக் கல்லூரியில் பயின்று MBBS (MD in Ukraine) (டாக்டர்) பட்டம் பெற்றுள்ளார்.


கடந்த 09/07/2020 வியழக்கிழமை மாலை 06.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற விழாவில், UZHHOROD NATIONAL UNIVERSITY மருத்துவக் கல்லூரி Rector VOLODYMYR SMOLANKA மற்றும் Dean KALIY VASYL அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,  கோபாலப்பட்டிணம் மாணவர்கள் A.முகமது சித்திவ் மற்றும் A.தமீம் அன்சார் உட்பட அங்கு பயின்ற ஏராளமானோருக்கு எம்.பி.பி.எஸ் (டாக்டர்) பட்டச் சான்றிதழை வழங்கினார்கள்.

மருத்துவ சேவைகளில் சிறந்து விளங்கிடவும் மற்றும் மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ பணியாற்றிட GPM MEDIA வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


Post a Comment

0 Comments