புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் சேந்தமங்கலம் ஐ.டி.ஐ. காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவர் புதுக்கோட்டை சென்று விட்டு அங்கிருந்து நேற்று காலை ஸ்கூட்டரில் ஆலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆலங்குடி கோவிலூர் நான்கு ரோடு அருகே வந்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிப்பர் லாரி டிரைவர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவிலை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.