புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரசு மாணவர்கள் விடுதிகளில் சமையலர் (ஆண், பெண்) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு.!



மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் சமையலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் 29 ஆண் சமையலர் மற்றும் 18 பெண் சமையலர் காலிப்பணியிடங்கள் இன சுழற்ச்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் 01.07.2020 அன்றைய தேதியின் படி SC, ST பிரிவினராக இருந்தால் 18 முதல் 35 வயதிற்குள்ளும், BC, BCM, MBC, DNC பிரிவினருக்கு 18 முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினராக இருந்தால் 18 முதல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அரசாணை எண்.303 நிதித்துறை, நாள்: 11.10.2017 ன் படி ஊதியம் ரூ.15,700 மற்றும் இதரபடிகள் வழங்கப்படும். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் முழுநேர சமையல் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் www.pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும், அதனை முழுமையாக பூர்த்தி செய்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் வரும் 25.09.2020 அன்று மாலை 5.45க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம். 

காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது பரிசீலிக்க இயலாது. 

மேலும் விடுதிகளில் உள்ள சமையலர் காலிப்பணியிடங்களுக்கு முன்னர் 14.03.2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பித்தோரின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/09/2020091046.pdf


Post a Comment

0 Comments