சுங்கச்சாவடியை மூடக்கோரி பிரதமருக்கு புறா விடு தூது புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நூதனப் போராட்டம்



புதுக்கோட்டையை சுங்கசாவடி இல்லாத கோட்டையாக மாற்றக்கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விடும் போராட்டம் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆறு மாத காலமாக கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த கால சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் வாகனங்கள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் தற்போது தான் வெளியே வர தொடங்கி உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தில் சிறிது கூட அக்கறை இல்லாமல் மத்திய அரசு சுங்க கட்டண வரியை உயர்த்தி உள்ளது. அதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். பல வருட காலமாக சரி செய்யாமல் இருக்கும் களமாவூர் ரயில்வே பாலத்தை உடனே சரிசெய்ய வேண்டும் இதை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இழுத்து மூடுவோம் என்ற அறிவிப்பினை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று புறாக்கள் மூலம் தூது அனுப்பும் போராட்டத்தை அவர்கள் நடத்தினார். 

போராட்டத்தில் கலந்து கொண்டோர் 'என் ரோடு, என் உரிமை; டோல் தர முடியாது போடா' என்ற வாசகங்கள் பொறித்த பனியன் அணிந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த போராட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Post a Comment

0 Comments