ஏழை மாணவிக்கு குரூப் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி புத்தகங்களை இலவசமாக வழங்கிய புதுக்கோட்டை எஸ் பிபடித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் அதற்கு ஏழ்மை நிலை தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டு உதவியை எதிர்பார்த்து இருந்த ஏழை மாணவி ஒருவருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்து அந்த மாணவி போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கு தேவையான புத்தகங்களையும் இன்று வழங்கி உதவியுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஏழை மாணவியின் குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாணவி சத்யாவிற்கு அவர் வசிப்பதற்கான வீடு ஒன்றினை கட்டிக்கொடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி அண்மையில் உத்தரவிட்டு அதற்கான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பசுமைவீடு கட்டும் திட்டத்திற்கான ஆணையை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி, போரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவி சத்யாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தன்னுடைய அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து மேற்படிப்பிற்கு தேவையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய புத்தகங்களை தன் சொந்த செலவில் நேற்று வழங்கினார்.

மேலும் மாணவி சத்யாவிற்கு முழு படிப்பிற்கான செலவையும், மேற்படிப்பிற்கான உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறிய அவர் போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் மூலம் நல்ல முறையில் படித்து வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த உதவி வாழ்வில் மறக்கமுடியாத உதவி என்றும் மாணவி சத்யா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


Post a Comment

0 Comments