ஆவுடையார்கோவில் அருகே நெட்டியேந்தல் கண்மாய் தூர்வாரும் பணியில் ஊழல் - விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு ஜெபமாலை பிச்சை ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு சுந்தர்ராஜன் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நெட்டியேந்தல் கிராமத்தில் உள்ள புது ஏந்தல் ஏரியை குடி மராமத்து வேலையை ஆயக்கட்டு தாரர்களுக்கு கொடுக்காமல், ஒப்பந்ததாரர்களுக்கு வேலையை கொடுத்து வேலையை சரிவர செய்யவில்லை என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post a Comment

0 Comments