திருவரங்குளம் அருகே வீடு கட்டித் தர வலியுறுத்தி டவரில் ஏறி போராட்டம்.!வீடு கட்டி தர வலியுறுத்தி செல்போன் டவரில் ஏரி போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அருகே தோப்புக் கொல்லை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் பெயிண்டர் சிவா இவருக்கு மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய  கஜா புயலில் தோப்புக் கொல்லை அகதிகள் முகாமில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தது சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனமுடைந்த சிவா தோப்புக் கொல்லை அருகே உள்ள தனியார் செல்போன் டவர்  ஒன்றில் ஏறி சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறை வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒலிபெருக்கி மற்றும் செல்போன் மூலமாக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரின் கோரிக்கையை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சிவா செல்போன் டவரிலிருந்து கீழே இறங்கி வந்ததை தொடர்ந்த அப்பகுதியில் நிலவி வந்த பதற்றம் தனிந்தது.

மேலும் தீயணைப்பு துறை சார்பில் டவரிலிருந்து அவர் கீழே குதித்தாலும் அவரை காப்பாற்ற டவரை சுற்றி நெட் வலைகளை  கட்டியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. வீடு கட்டிதரக் கோரி ஒருவர் செல்போன் டவரில் ஏரி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post a Comment

0 Comments