அறந்தாங்கி அருகே ஊர்வணி ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு அமைத்ததில் ரூ.9 லட்சம் மோசடி.?அறந்தாங்கியில், ஆழ்குழாய் கிணறு அமைக்காமலேயே அமைத்ததாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஊர்வணி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தி வயல், பாக்குடி ஆகிய பகுதிகளில் 2016-17-ம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்படாத நேரத்தில் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்காமலேயே இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைத்ததாக கூறி ரூ.9 லட்சம் கணக்கு காட்டி மோசடி நடைபெற்று உள்ளதாகவும், இந்த தகவல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டு உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதேபோல, பல்வேறு இடங்களில் மோசடி நடைபெற்று இருக்கலாம். இந்த மோசடி குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments