GPM மீடியா செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் குபா தெரு (அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலை) மக்கள்.!



GPM மீடியா செய்தி எதிரொலியாக கோபாலப்பட்டிணம் குபா தெரு (அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலை) மக்கள் வெளிச்சம் பெற்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் தோப்பு சாலை கடந்த ஒரு மதத்திற்கு மேலாக இருளில் மூழ்கி காணப்பட்டது.இதனால், அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மழைக்காலங்களாக இருப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் அந்த வழியாக குடிதண்ணீர் எடுத்து செல்லும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.


இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும் வார்டு உறுப்பினர்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்குகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் இது சம்மந்தமாக உடனடியாக சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இது சம்மந்தமாக GPM மீடியாவில் நேற்றை தினம் கண்டுகொள்ள ஊராட்சி மன்ற தலைவர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில் நேற்று மதியம் அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் சரிசெய்யப்பட்டது.

ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் அப்பகுதி மக்களிடம் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரத்தினை சம்மந்தப்பட்டவர்கள் அகற்ற வேண்டும் என பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால், புகார் மீது உடனடியாக நடவைடிக்கை எடுக்க வேண்டும் என இந்த தருணத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment

0 Comments