நாம் தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் மாரடைப்பால் மரணம்..!சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். தொடக்கம் முதல் நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டவராக இருந்தார்.


Post a Comment

0 Comments