நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அவர்களின் உத்தரவின் படியும், நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு அவர்களின் அறிவுரையின் படி இன்று உலக தூய்மைப்படுத்தும் தினம் 19.09.2020 இன்று அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குள் உள்ள பெரியகடைவீதி புதுக்கோட்டை ரோடு பழைய ஆஸ்பத்திரி ரோடு மற்றும் பேராவூரணி ரோடு பட்டுக்கோட்டை மெயின் ரோடு கூட்டு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வர்த்தக சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் படி வீடுவீடாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது மற்றும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான கோலப்போட்டி கடைவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலும் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகம் முன்பு நடைபெற்றது.
மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிவில் நல்ல முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நல்ல முறையில் சுத்தம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு அறந்தாங்கி உதவி ஆட்சியர் அவர்களால் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.