பொன்னமங்கலம் ஊராட்சி உட்பட 50 ஊராட்சிகளில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங்க திட்டம்.! புதுகை கலெக்டர் தகவல்.!



விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ராங்கியன்விடுதி, தாயினிபட்டி, பி.உசிலம்பட்டி, ஏனாதி, புதுப்பட்டி, கண்ணங்குடி, நம்பூராண்பட்டி மற்றும் கல்லுக்காரன்பட்டி ஆகிய 8 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாங்குடி, அரசர்குளம் கீழ்பாதி, மேல்நிலைவயல், பொன்னமங்கலம், நடுப்பட்டி, மருதன்கோன்விடுதி, ஒடுக்கூர், கோவனூர், முள்ளூர், திருமயம்-மேலூர், குப்பக்குடி, ஆலங்குடி, மதியநல்லூர், மண்ணக்குடி, மிரட்டுநிலை, பொன்பேத்தி, முதலிப்பட்டி, பள்ளத்துப்பட்டி, எம்.உசிலம்பட்டி, பெருங்களூர், மிதிலைப்பட்டி, எல்.என்.புரம், மாத்தூர், அன்னவாசல்- மேலூர், மறமடக்கி, முனசந்தை, பூவளூர், நத்தமாடிப்பட்டி, முள்ளங்குறிச்சி, பாப்புடையான்பட்டி, மறவாமதுரை, பெருங்கொண்டான்விடுதி, நச்சாந்துபட்டி, மாங்காடு, மேபூதகுடி, முக்கண்ணாமலைப்பட்டி, மேலபட்டு, நல்லாம்பாள்சமுத்திரம், நெப்புகை, ஓடப்பவிடுதி, பெரம்பூர் மற்றும் மேலமேல்நிலை ஆகிய 42 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

இத்திட்டங்களுக்கான முதல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 2-வது சிறப்பு கிராம சபைக்கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 5-ந் தேதிகளில் நடத்தி பயனாளிகள் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. 

இத்திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், நிலமற்ற விவசாயிகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம். 

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments