தெருவுக்கு தெரு சி.சி.டி.வி, நீர் சேமிப்பு, முறையாக வரி செலுத்தும் மக்கள்... மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாய் விளங்கும் குழிப்பிறை ஊராட்சி மன்ற தலைவர்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குழிப்பிறை கிராம ஊராட்சித் தலைவரின் சிறப்பான செயல்பாடு காரணமாக அந்த கிராமம் நகரங்களுக்கு இணையான ஹைடெக் வசதிகளை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் குழிபிறை ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, குழிபிறை ஊராட்சி தலைவராக அழகப்பன் என்பவர் உள்ளார். அழகப்பன் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு குழிபிறை ஊராட்சியின் முகமே மாறத் தொடங்கியது. 

முதல் கட்டமாக கழிவறை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அன்பழகன் கடும் முயற்சி மேற்கொண்டார், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியையும் முறையாக செலுத்த மக்களை ஊக்குவித்தார். இதனால், மக்களும் முறையாக வரி செலுத்த மக்கள் நலப்பணிகளை அழகப்பன் மேற்கொள்ள உதவியாக அமைந்தது. மேலும், குழிபிறை மக்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் பசுமை  டிரஸ்ட் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை இந்த ஊராட்சியில் அழகப்பன் செயல்படுத்தியுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளாக  அந்த பகுதியில் தூர் வாராமல் இருந்த பாப்பான் குளம்  தூர் வாரப்பட, தற்போது  தற்போது  அந்த குளத்தில் நீர் நிரம்பி வழிகிறது. மூடிக்கிடந்த நூலகத்தை புதுப்பித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நகரங்களுக்கு இணையாக குழிபிறை ஊராட்சி பகுதியில் குற்ற சம்பவங்கள் தடுக்கவும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் கண்டுபிடிப்பதற்கும் உதவியாக ஊராட்சி  முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.   சுகாதார பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்க பசுமை டிரஸ்ட் மூலமாக பேட்டரி வண்டியும் வாங்கி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறிய கிராமமாக இருந்தாலும்  சகல வசதிகளுடன் குழி பிறை கிராமம் உள்ளது.

தற்போது, இந்த கிராமத்துக்கு என தனியாக சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென்ற கனவுடன் அழகப்பன் செயல்பட்டு வருகிறார். ஆரம்ப சுகதார நிலையம் அமைக்க பசுமை டிரஸ்ட் ரூ.  50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. மேலும், இதற்கான நிலமும் ஊராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்திடம்  ரூ.50 லட்சம் செலுத்தி ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அனுமதி வேண்டியுள்ளார். எனவே , குழிபிறை கிராமத்தில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊராட்சிக்கு ஒரு  அழகப்பன் இருந்தால், ஒவ்வொரு ஊராட்சியும் உன்னத நிலையை எட்டி விடுமே!  

இது போன்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செயல்பட வேண்டும் என்று மக்களின் கனவாக இருக்கிறது. 

கனவை நினைவாக்குவாற பொறுத்திருந்து பார்ப்போம்.!


Post a Comment

0 Comments