அறந்தாங்கி அருகே வல்லவாரியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு.!அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லவாரியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) நேற்று திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, வல்லவாரி கிராமத்தில் சமாதான கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றும், அதுவரை டாஸ்மாக் கடையை மூடுவது என்றும் எடுத்துக் கூறினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல, அறந்தாங்கியை அடுத்த நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை நேற்று திறக்க இருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்படவில்லை. அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி சாலையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments