தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் தானியங்கி பால் இயந்திரம் திறப்பு விழா.!



புதுக்கோட்டை உழவர் சந்தை மற்றும் டவுன் பகுதியில் 12 இடங்களில் வேளாண் வணிகத்துறை மூலம் அமைக்கப்பட்ட கறவை மாடு விளைபொருள் குழுக்களால் மக்களுக்கு பசும் பாலினை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் 24 மணி நேரமும் பால் கிடைக்கும் வகையில் உழவர் சந்தையில் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார். துணை இயக்குனர் சங்கரலட்சுமி எந்திரத்தை இயக்கி வைத்து பால் விற்பனையை தொடங்கி வைத்தார். 

ஏ.டி.எம். எந்திரத்தில் பயன்படுத்தப்படும் கார்டை போல இதில் பால் பெற, பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கார்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ரூபாய் நோட்டுகளை எந்திரத்தில் செலுத்தி அதற்கேற்ப பாலை பெறலாம். பாலை வாங்க வரும்போது பாத்திரம் எடுத்து வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரமும் இயங்குவதற்கு வசதியாக எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் வேளாண்மை துணை இயக்குனர்கள் சக்திவேல், பெரியசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த தானியங்கி எந்திரம் தமிழகத்தில் உழவர் சந்தைகளில் புதுக்கோட்டையில் முதன் முதலாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments