மீமிசலில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பாக சட்ட நகல் கிழித்தெறிப்பு போராட்டம்.!
வேளாண் திருத்த மசோதாக்களை எதிர்த்து SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், கோபாலபட்டினம் கிளை சார்பாக சட்ட நகல் கிளித்தெறிப்பு போராட்டம் மீமிசல் தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோபாலபட்டினம் கிளை தலைவர் ஹனீபா அவர்கள் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வேளாண் திருத்த மசோதாக்களின் சட்ட நகல் கிழித்தெறிந்து போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சாலிஹ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இப்போராட்டத்தின் இறுதியில் கோபாலபட்டினம் கிளை தலைவர் ஹனிஃபா அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.போராட்டம் முடிந்த பிறகு சாலைகளில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வினியோகிக்கப்பட்டது.

தகவல்:
SDPI கோபாலபட்டினம் கிளை,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments