புதுக்கோட்டையில் திடீர் தீ விபத்து 3 வீடுகள் எரிந்து நாசம்...புதுக்கோட்டை நகர் சமத்துவபுரம் அருகில் வெள்ளையம்மாள் என்பவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் அடுத்தடுத்து உள்ள 2 வீடுகளுக்கும் தீ பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தாலும், 3 வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments