புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம்.!



வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி மழை மற்றும் வெள்ள பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாதிரி ஒத்திகைப் பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன் அவர்கள் முன்னிலையில் நேற்று (24.09.2020) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பின் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது. 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியின் போது புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் மழை மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை கயிறுகள் கொண்டும், ரப்பர் படகுகள் மூலம் மீட்பதும், சாலைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் சாய்ந்த மரங்களை மின்ரம்பங்கள் மூலம் அறுத்து மீட்பு பணிகள் செய்வது மேலும் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு மின் அதிர்ச்சியில் மயக்கமுற்ற நபருக்கு ஊPசு மூலம் முதலுதவி செய்து காப்பாற்றுவது, புகை சூழ்ந்த இடங்களில் மயக்கமுற்ற நபர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன் அவர்கள் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி.பானுபிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments