புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மையம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பரிசோதனை மேற்கொள்ளும் நபரின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும் தனியாக இணையதளம் வசதியும் உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. 

மாவட்டத்தில் தினமும் 1,500 முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதில் மொத்தம் 8, 605 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் இதுவரை 7, 723 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments