நெடுவாசலில் பனைமரங்களுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.! பனைமரங்களை வெட்டியதற்காக 5 ஆயிரம் பனை விதைகளை நடவேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை.!வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு, நெடுவாசல் மேற்கு மற்றும் எல்.என்.புரம் ஆகிய 3 ஊராட்சிகளின் எல்லைப்பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த 46 பனைமரங்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மரவியாபாரி வெட்டி லாரியில் கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதைஅறிந்த நெடுவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்தனர். இதனையடுத்து, இப்பகுதிக்கு வந்த வடகாடு போலீசார், லாரியை மீட்டு வடகாடு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். 

மேலும் இந்த பனைமரங்களை வெட்டியதற்காக அபராதம் விதிக்க தாசில்தார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நெடுவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பனைமரங்களை வெட்டியதற்காக 5 ஆயிரம் பனை விதைகளை நடவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments